Monday 23 May 2016

Ngana thalam



ஞானத்தலம்

பிச்சினிக்காடு  இளங்கோ

அது ஒரு
ஞானத்தலம்
அங்கே
ஒவ்வொரு தளமும்
ஞானத்தளமே

ஞானம்
அழகாய் இருக்குமிடம்
அதுதான்

மவுனமும்
அமைதியும்
கைகோத்து உலவுமிடம்

மவுனமாய்
சிலரைச் சந்திக்க
அரிய வாய்ப்பு

உதட்டளவு உரையாடல்
இல்லாத
ஒரே இடம்

எல்லோரும்
ஞானிபோல் இருப்பார்கள்
ஞானிகளும் இருப்பார்கள்

அவரவர்
அவரவரிடத்தில்
இருப்பார்கள்



எவருடனும்
அவசரமின்றி
அளவலாவி வரலாம்

சிலரைக் கையோடு
அழைத்தும் வரலாம்

அவர்கள்
வாய்திறந்து
வார்த்தை விரயம்
செய்வதில்லை

அங்கே இருந்தால்
அனைவருக்கும் மரியாதை
அதற்கொரு மரியாதை

புண்ணியத்தலத்திற்குப்
போய்வரும்
புண்ணியத்தைக்காட்டிலும்
புண்ணியம்
இந்த
ஞானத்தலத்திற்குச் சென்று
திரும்புவதில் கிடைக்கிறது

அறிவை
அடகுவைப்பது புண்ணியமா?
அறிவைத்தேடுவது
புண்ணியமா?

தேடக்கிடைப்பதை
விடுத்து
தேடியும்கிடைக்காததைத்
தேடுவது
ஞானமா?


அதுபோல் ஓர்
உன்னதமான இடமும்
உயர்ந்த இடமும்
வேறில்லை

ஞானத்தடம்பார்த்து
நாளும் நடப்பது
வழக்கமானால்
வானம்
வணக்கம் சொல்லும்

(26.12.2013 அன்று 5.30க்கு சுவாசுகாங் நூலகத்தைவிட்டு வெளிவரும்

No comments:

Post a Comment