Monday 23 May 2016

கரைநோக்கி நகரும் புயல்



       

கரைநோக்கி நகரும் புயல்
 (21.11..2010 யாமத்தில்  1 மணிக்கு எழுதியது.)

பிச்சினிக்காடு இளங்கோ

அவர் இப்போது
தும்பைப்பூ வெள்ளையில்
வருகிறார்

முகத்தில் இருக்கவேண்டியவை
கைகளிலும்
விரகளிலும்
கழுத்திலும்

பொன்கூட கூட
முகத்திலும்கூட
ஒளிகூடித்தான் இருக்கிறது

வசதியைச்சொல்லும்
வாகனம்

வாகனம் நிறைந்த பயணம்
எப்போதும்

எல்லாம் அந்தத்
தொழில்தான் தந்தது

ஒன்றியத்திலிருந்து
வட்டம் மாவட்டம்
நகரம் மாநகரம் எங்கும்
இதுதான் தொழில்

எல்லோர்க்கும்
லாபமாம்

பொய்கள்
அதிகம் உலவும்
தொழிலின் பெயரில்
உண்மை ஒட்டியிருக்கிறது

மண்ணாசை இல்லாதவ்ர்கள்
இவர்கள்தான்

இவர்களைப் பார்க்கிறபோது
சோகம்
சொல்லாமல் வருகிறது என்னிடம்

இவர்களது
லாபக்கணக்கில்
காணாமல்போனது
வாழை
தென்னைத் தோட்டங்கள்
கரும்பு
நெல் வயல்கள்

வயிற்றுக்கு வழிதேடி
அலையும் காலம்
வந்துகொண்டே இருக்கிறது
கரைநோக்கி நகரும்
புயலைப்போல.


No comments:

Post a Comment