Saturday 28 September 2013

சிற்பம் சிதைக்கும் உளி பிச்சினிக்காடு இளங்கோ

    

               

சிற்பம்
சிதைக்கும் உளி

பிச்சினிக்காடு இளங்கோ

அன்று...
இரங்கற்பா படித்து
இதயத்தைப்பிழிந்து
கண்ணீர் கசியவைத்தேன்

வாழ்த்த அழைத்தபோதும்
வளமானச்சொற்களால் வாழ்த்தி
வாழ்த்திடப்பெற்றேன்

கலந்துரையாடும்போதும்
கரைந்துரையாடி
கவனிக்கப்பெற்றேன்

முடிந்ததைச்செய்யும்போதும்
முழுமையாய்ச்செய்தேன்
என
முன்னுரை கிடைக்கப்பெற்றேன்
ஆசையே இல்லா
புத்தரைப்போல பேசி
அனைவராலும் கவரப்பெற்றேன்

பெண்களோடும் அப்படித்தான்
பெருமைப்பட நடந்துகொண்டேன்
பெருமைப்பட நடத்தப்பெற்றேன்

எல்லா இடத்திலும்
எனக்குப்பேர் என்றாலும்
எல்லார் இதயத்திலும்
என்பேர் நின்றாலும்
குரங்கு மனசுமட்டும்
குறைபடவைக்கிறது என்னை

(09.09.2013 அன்று விநாயகசதூர்த்தி. எழுத்தாளர் எம் சேகரின் கதையை முடித்து எழுதிய கவிதை. பேருந்து 67இல் எழுதியது. பிற்பகல் 3-30 க்கும் 4-30க்கும் இடையில் நிகழ்ந்தது.

      
             

A Brief About Pichinikkadu Elango

A Brief About Pichinikkadu Elango Pichinikkadu Elango , is basically a Media person, started his career as an Agricultural Officer in India, Farm Radio Reporter in All India radio, Producer Presenter in Singapore Broadcasting Corporation, Editor of Singai Chudar (monthly of Tamil Representative council, Singapore) and as a Manager of MDIS(Management development Institute of Singapore) Rep Office in Chennai, Tamil Nadu State, India. He born in the year 1952 for the Parents Mr Marimuthu Arumugam and Ilakkumi ammal. He married Kalaiselvi and has three Sons namely Elancholan,Elamaran and Kalikovan.Senthamil Maran and Tamilvannan are his Grand Sons.All are in Singapore. He managed himself as a regular writer of Tamil Murasu so far and also maintained a serial speaker of OLI 96.8. He has published 10 Books of Poetry collection and one Poetry Drama. Three books on prose which includes Editorial of Singai Chudar, appreciation of poetry and another one is about poetry is otherwise called Beauty. He has written two dramas and both was staged by Ravindran Drama Group. Out of which one is the famous “Animal Farm” written by George Orwell was translated by him into Tamil Drama format and staged by the same Ravindran Drama Group. He received Golden Point merit award for the Poetry category. He started poetry reading session in kampong Glam Community Centre in the year 2000 with their support. Now it is being continued in Jalan Besar Community Centre (last Saturday of every month) called “Kavi Maalai”. He is a member of Singapore Tamil Writers Association and was also a volunteer of SINDA. His articles were published in almost all leading Magazines like KUMUDAM, JUNIOR VIKADAN in India and also in Internet Magazines. He presided and participated in nationwide poetry recitations and actively involved in literary activities. Total no of Books he has published are 14 and another two under printing to be released..recently (28.09.2013)my song about nature was selected for special mention award by NEA of singapore. The music was done by Mr Guna who received the award with me on the stage from NEA authorities. Pichinikkadu Elango PICHINIKKADU ELANGO

அங்குசம்காணா யானை (28.02.2013)

அங்குசம்காணா யானை (28.02.2013) பிச்சினிக்காடு இளங்கோ நிலைத்தது எது என்று தெரியாவர்கள் நினைத்தபடி ஆடி முடித்துவிடுகிறார்கள் தெரியாவர்கள் தெரிந்துகொள்ள விழைந்தால் திருந்திவிடுவார்கள் விழையாதவர்கள் இறுதிவரை விளங்காதவர்களாகிவிடுகிறார்கள் விளங்காதவர்கள் விலங்காகும் வாய்ப்புமுண்டு மனிதர்களோ அடிப்படையில் சமூக விலங்குகள் அவர்கள் வெண்மையின் உச்சத்தை வெளிச்சப்படுத்துகிறார்கள் பாகன் பழக்காத யானையாகிவிடுகிறார்கள் அவர்களால்தான் தீவினைகளும் தீராக்கொடுமைகளும்… ஈடற்ற இழப்புகளை எண்ணும்போதெல்லாம் விலங்குகளைத்தான் எண்ணவேண்டியிருக்கிறது எண்ணம் விரிவடையாதவர்களை எண்ணும்போதெல்லாம் மனதுக்குள் என்னமோபோல் இருக்கிறது என்ன செய்ய..? எல்லாம் எண்ணம்தான்

Friday 27 September 2013

payanathil oru payanam

பயணத்தில் ஒரு பயணம் பிச்சினிக்காடு இளங்கோ எல்லோரும் இருக்கிறார்கள் இங்கே இங்கேயே அவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள் எதிரில் இருக்கிறார்கள் எனினும் எதிரிலும் இல்லை எதிரியாகவும் இல்லை இது இன்றைக்கு எல்லைகள் கடந்த நிலை எல்லா நாட்டிலும் இதுதான் நிலை கைப்பேசி கையடக்கக்கணினி பண்பலை வானொலி காரணங்கள் தோற்றமாயையோடுதான் தொடர்கிறது வாழ்க்கை சுருக்கமாய்ச்சொன்னால் இசைபடவாழ்கிறார்கள் பயணத்தில் இருக்கிறார்கள் எனினும் அவர்கள் இன்னொரு பயணத்தில் இருகிறார்கள் பேருந்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் பயண அட்டையைத் தேடுவதைவைத்துத்தான் தெளிவானது முடிவு ( சிங்கப்பூர் பேருந்தில் ஏறும்போதும் இறங்கும்போது பயணஅட்டையை கையில்வைத்துக்கொள்ளாமல் அதுவரை எதையோ கேட்டுவிட்டு அவசர அவசரமாக தேடுவதைப்பார்த்து எழுதியது. 17.07.2013)