Saturday 28 September 2013

சிற்பம் சிதைக்கும் உளி பிச்சினிக்காடு இளங்கோ

    

               

சிற்பம்
சிதைக்கும் உளி

பிச்சினிக்காடு இளங்கோ

அன்று...
இரங்கற்பா படித்து
இதயத்தைப்பிழிந்து
கண்ணீர் கசியவைத்தேன்

வாழ்த்த அழைத்தபோதும்
வளமானச்சொற்களால் வாழ்த்தி
வாழ்த்திடப்பெற்றேன்

கலந்துரையாடும்போதும்
கரைந்துரையாடி
கவனிக்கப்பெற்றேன்

முடிந்ததைச்செய்யும்போதும்
முழுமையாய்ச்செய்தேன்
என
முன்னுரை கிடைக்கப்பெற்றேன்
ஆசையே இல்லா
புத்தரைப்போல பேசி
அனைவராலும் கவரப்பெற்றேன்

பெண்களோடும் அப்படித்தான்
பெருமைப்பட நடந்துகொண்டேன்
பெருமைப்பட நடத்தப்பெற்றேன்

எல்லா இடத்திலும்
எனக்குப்பேர் என்றாலும்
எல்லார் இதயத்திலும்
என்பேர் நின்றாலும்
குரங்கு மனசுமட்டும்
குறைபடவைக்கிறது என்னை

(09.09.2013 அன்று விநாயகசதூர்த்தி. எழுத்தாளர் எம் சேகரின் கதையை முடித்து எழுதிய கவிதை. பேருந்து 67இல் எழுதியது. பிற்பகல் 3-30 க்கும் 4-30க்கும் இடையில் நிகழ்ந்தது.

      
             

No comments:

Post a Comment