Wednesday 25 May 2016

போதாத காலம்



   போதாத காலம்

பிச்சினிக்காடு இளங்கோ

     இது
     நடிகர்களின் காலம்
     
     நல்ல காலமா
     பொல்லாத காலமா
     எதுவும்
     சொல்லமுடியாத காலம்
     
     விழித்ததிலிருந்து
     விழிமூடும்வரை
     நடப்பதென்னவோ
     நடிப்புத்தான்

     நடிகர்களுக்காக
     வாழ்கிறோம்
     அல்லது
     நடிகர்களாக வாழ்கிறோம்

     கவிஞன் சொல்
     பொய்ப்பதில்லை
     சேக்ஸ்பியர் சொன்னதும்
     பொய்க்கவில்லை

     நடித்து மகிழலாம்
     மகிழ்ச்சிக்காக நடிக்கலாம்

    ஆதாயம் கருதி
    அரிதாரமின்றி
    நடித்தால்
    வாழ்க்கையின் ஆதாரம்
    சேதாரம்

   எல்லா இடங்களிலுமா
   பெருமூச்சு விடுவது

   பொன்னுடன் செம்பு
   சேர்வதுபோல் சேர்த்தால்
   நகைபோல் ஒளிரும் வாழ்க்கை
   இல்லையேல்
   நகைப்பிற்குரியதாகும் வாழ்க்கை
  
   (04.04.2013 அன்று மாலை 6மணியிலிருந்டு 7மணிக்குள் தமிழ்வள்ளல்   நாகை தங்கராசு அலுவலகத்தில் தஞ்சை கூத்தரசன் முன்னிலையில்
எழுதப்பட்டது)

No comments:

Post a Comment