Monday 30 December 2013

பசிமறந்துபோயிருப்போம்



பசிமறந்து போயிருப்போம்

   பிச்சினிக்காடு இளங்கோ

கடவுச்சீட்டு குடிநுழைவுஅனுமதி
ஏதுமில்லாமல்
விமானம் ஏறாமல்
எங்களூர்
ஏரிக்கு வந்திருக்கும்
பன்னாட்டுக் கவிஞர்களே
உங்களைப்பார்க்க
ஒரு சோகம் விளைகிறது

உங்களோடு
ஒரு கவியரங்கம்
நடத்தமுடியவில்லையே!
வேதனை வருத்துகிறது

உங்கள் பயணம்
எவ்வளவுத் துயரம்!
உங்கள் மனசில்
எத்துணைப் பாரம்! 

செலவுக்கு ஏதுமில்லாமல்
எவ்வளவுத்தூரம்
செலவு செய்திருக்கிறீர்கள்!

பகிந்துகொள்ள
பொது மெடையில்லையே!
பொது மொழியில்லையே!
துயரம் சுரக்கிறது!




உங்கள்
அமைதியின் அழகை  
அழகின் அமைதியை
பார்க்கப் பார்க்க
பருகப் பருக
பரவசம் பிறக்கிறது
 
ஐப்பசி கார்த்திகை
அடமழைத் திருவிழாவென்று
மடல்போட்டு உங்களை
அழைத்தது யார்?

நீரெழில் போய்த்துப்போனால்
நீங்களெல்லாம் போவதெங்கே?
ஏக்கம் குலைக்கிறது
ஏதேதோ குடைகிறது

பெட்டிப்படுக்கையின்றி
எங்கள்
பட்டிக்கிராமத்தைப் பார்க்கவந்த
நீங்கள்தான்  எங்கள்
நெற்றிப்படத்தொழும்
நேசத்துக்குரியவர்கள்

உங்கள்
கரங்களின் வலிமைக்கும்
இதயத்தின் வலிமைக்கும்
ஈடில்லை
இமயத்தின் வலிமை

இரைதேடி வருகிறீர்கள்
பாவிகளால்
இரையாகிப்போகிறீர்கள்

நீங்கள் பார்த்த
நதிகளின் அழகை
மலைகளின் எழிலை
வனங்களின் வனப்பை
காற்றின் எதிர்ப்பை
கவிதையாய்ச்சொன்னால்
காலமெல்லாம் கேட்டிருப்போம்
கண்ணுறக்கம் விட்டிருப்போம்
உங்கள் உறவுகளை
உங்களூர்ப்  பெருமைகளை
பாட்டாகப்பாடுங்கள்
பசிமறந்து போயிருப்போம்
பறவைகளே பறவைகளே
பங்காளி உறவுகளே



(‘மனம்புகும் சொற்கள்’சிற்பி எழுதிய நூலில் 31வது பக்கத்தில் கவிஞர் தேவதேவனின் கவிதை “அந்தமரக்கிளையோடு
                                ஒரு குருவிக்கூடாய்
                                அசைந்தபடி நான்
                                அமர்ந்திருந்த
                                மொட்டை மாடி” படித்துக்கொண்டிருந்தபோது 20.12.2013 அன்றி மாலை 5.31க்கு எ

No comments:

Post a Comment