Wednesday 1 January 2014

நீதானா அந்தக்குயில்





நீதானா அந்தக்குயில்

  பிச்சினிக்காடு இளங்கோ

  அந்த மரக்கிளையில்
  அன்றாடம் அந்தக்குயில்
  வாய்மொழித்தேனைத் தூவும்
 
  கரிசனத்தோடு
  காலையில் மாலையில்
  இரவிலும்கூட கூவும்
 
  அன்புக் குயிலின்
  பாட்டும் பேச்சும்
  சங்கீதமாகக் கரையும்

  இங்கிதம் கலந்த
  சங்கீதக் காற்று
  எல்லா வழியிலும் தழுவும்
 
  குதூகலம் ததும்பும்
  குயில்மொழி வாசம்
  சுவாசக்காற்றாய் வீசும்
  
  எனக்காகக் குயில்
  எனக்கானக் குயில்
  கனவிலும் இப்போது வருகிறது

 குயில்தரும் வரவால்
 குயில்மொழி உறவால்
 இரவும்பகலும் தொலைகிறது

 குயில்கூவும்வேளை
 சபைநிறைந்த ரசிகன்
 கவிஞன் நான் ஒருவனே

கச்சேரி முடிந்தாலும்
கலையாதசபையின்
கலை ரசிகனும் நானே

தூர இருந்து
தூக்கம் கவரும்
நீதானா அந்தக்குயில்

( நாள் 29.03.2012 11.30

No comments:

Post a Comment