Wednesday 18 March 2015



      நாணயமானவளே..

பிச்சினிக்காடு இளங்கோ

    நீ துணையிருந்தால்
    எனக்கு
    யானைபலம்

    அன்றாடம்
    எல்லாம் எளிதாகிவிடுகிறது
    இல்லையேல் அரிதாகிவிடுகிறது
   
    துக்கம்கூட
    துக்கமாயில்லை

    கைகுலுக்கக் காத்திருக்கிறார்கள்
    இல்லையேல்
    கவனிக்கத்தவறிவிடுகிறார்கள்

    நீ  இல்லாதபோதும்
    நிம்மதி இருக்கிறது
    கூட  இருந்தால்
    அது கூடிவிடுகிறது
  
    நீ இல்லாதபோதும்
    எனக்கு
    முகவரியிருக்கிறது

   என் முகவரி
   என்னால் வந்தது
   அதன்  ஒவ்வொரு
   அங்குல உயர்விற்கும்
   நானே காரணம்

   எனினும் என்னுடன்
   நீயும் இருந்துவிட்டால்
   பிறரைத்தேட வைக்கிறது

  இதுவரை
  என்னிடமிருந்தாலும்
  என்னிடம் வந்தாலும்
  உனக்குப்பெருமை
  இனி
  உன்னால் எனக்கும்பெருமை


வாழ்க்கை
 பொருளுடையதாய் விளங்க
 நீதான் அடிப்படை
 
நீயா நானா
என்பதைவிட
நீயும் நானும்
சேர்ந்திருப்பதே
தேவையானது
நியாயமானது
நாணயமானது

நாணயமான
வாழ்க்கைதானே
நாகரீகமானது?

 ( காலை 11.30 மணி, 28.12.2013குளியலறையில்

No comments:

Post a Comment