Saturday, 28 December 2013

அடிபோல் உதவ யாருமில்லை



அடிபோல் உதவ யாருமில்லை

பிச்சினிக்காடு இளங்கோ   

ஒன்பது கிரக
தலங்களும் இங்குதான்

மீனாட்சி
காமாட்சி
விசாலாட்சி போன்ற
அம்மன் திருக்கோவில்கள் எத்தனை?

பாடல்பெற்றத்
சிவத்தலங்களுக்கு
என்னகுறை?

அய்யனார் வீரனார்
கருப்பண்ணன்,வேடியப்பன்,
முனீஸ்வரன் மின்னடியான்
பைரவன்,தூண்டில்காரன்
காவல்தெய்வங்களுக்கு
கருணையில்லையா?

வைணவத்தலங்கள்
போதாதா?

சின்ன திருப்பதியும்
இங்குதான்

காசியிலிருந்து வருகிறார்கள்
இராமேசுவரத்திற்கு

நாகூர் ஆண்டவர்
அன்னை வேளாங்கண்ணி
ஆகாதா?

ஆறுபடை வீடும்
போதவில்லையா?

தீபம் பார்ப்பதற்கு
திருவண்ணாமலை வேண்டாமா?

மலைநாடு போகிறார்கள்
மாறவில்லை இப்பழக்கம்

இங்கெல்லாம்
தெய்வமென்ற சிலையா இல்லை?
இதற்கெல்லாம் அருள்புரிய
மனமா இல்லை?

என்னய்யா வேடிக்கை
தமிழனுக்கு அறிவே இல்லை



என்னசெய்வது
அடிஉதவுவதுபோல்
யாரும் உதவுவதில்லை


அதனால்தான்
அடித்துத் திருத்துகிறார்கள்
அய்யப்பன் பக்தர்களை

19.12.2011 (அய்யப்பக்தர்களுக்கு அடி)

No comments:

Post a Comment